
ஒன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.