தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களில் இருக்கும் பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சை திணைக்கள பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சை 2 ஆயிரத்து 888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கிலிருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இம்முறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.