
புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் எனும் 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.