பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறந்த முறையில் பாடசாலைத் தோட்டம் அமைத்ததுடன் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் விவசாய நுட்பம் தொடர்பாக அறிவூட்டல் செய்யப்பட்டது. அத்துடன் மாணவரின் போசாக்கு நிலையை ஆராய்ந்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியும் இவ்வருடம் சிறப்பான செயற்பாட்டை மேற்கொண்டிரிந்தனர்.
வடக்கு மாகாணத்தில் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கல்வித்திணைக்களம், விசாயத்திணைக்களம், சுகாதாரத்திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம் என்பவற்றின் பங்குபற்றுதலுடனும் பாடசாலைகளில் விவசாயத் தோட்டமுயற்சி, மூலிகை விழிப்புணர்வு, தகுந்த ஆகாரம் தேர்ந்தெடுப்பு, BMI ஐ கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்கும் முயற்சி, தொழில் வழிகாட்டல் முயற்சி என்பன சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இப்பாடசாலைகளில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் குறித்த இலக்கை ( நிலை -3) அடைந்தமைக்கான கௌரவிப்பு கடந்த வாரம் மல்லாவி மத்தியல் இடம்பெற்றது.
இதன் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ், வடக்கு ஆளுனர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பல உயர்மட்ட அதிகரிகளின் பிரசன்னத்தின் மத்தியில் இப் பாடசாலைகளின் சிறந்த செயற்பாட்டை பாராட்டி ரூபா 150000 பெறுமதியான காசோலைக்கான ஆவணம் கையளிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் பண்னத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க பாடசாலையும் கலந்துகொண்டு கௌரவத்தைப் பெற்றது.
இப்பாடசாலையின் சார்பில் பிரதி அதிபரும், விவசாய ஆசிரியரும் உட்பட பாடசாலை விவசாயக்கழக மாணவர்கள் கடந்த 10 ஆம் திகதி மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியில் கௌரவம் பெற்றனர்.