
கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென உயிரிழந்திருந்தார்.
அவருடைய மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்போதே அவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.