முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டாரநாயக்க நினைவேந்தல் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வை வழக்கம் போல் நடத்தாமல் இருக்க முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க நினைவு தினம் செப்டம்பர் 26 அன்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க செப்டம்பர் 26, 1959 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஆறு தசாப்தங்களாக, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வு ஹோரகொல்லாவில் உள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.