
வட மாகாண தென்னை உற்பத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை சார் உற்பத்தி பொருட்கள் பயிற்சி வகுப்பும் கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சிரட்டைக்கரி உற்பத்திக்கான உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கயிறு, கால்மிதி என்பவற்றை உற்பத்தி செய்யும் இயந்திரங்களும் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கராத்தே போட்டியில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், வட மாகாண தென்னை அபிவிருத்திச் சபை முகாமையாளர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விசுவமடு பிரதேச கட்டளை அதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.