
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து 21/10/2023 இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு ட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.







விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்து முள்ளனர்.
பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிசாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.