
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20.10.2023 அன்று அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.




17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றைய தினம் மீண்டும் இடம்பெற்றது.
இந்த நிலையில், இன்றைய தினமும் அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் எந்த சான்று பொருட்களும் காணப்படாத காரணத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் அகழ்வு பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.