
கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு ரக பேருந்து ஒன்று எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 19 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தவிர நேற்று இடம்பெற்ற மூன்று வௌ;வேறு வாகன விபத்துகளில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வாத்துவ பகுதியில் மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
இதேவேளை தெஹியத்தகண்டி மற்றும் அம்புலுவாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு உந்துருளி விபத்துகளில் 56 மற்றும் 75 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.