
நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09 நாள் உற்சவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில்24.10.2023 சிறப்பாக இடம்பெற்றது.



இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயத்திலும் மகிஷா சூரசங்கார உற்சவம் இடம்பெற்றது.
இவ் உற்சவ கிரியைகளை சிவஸ்ரீ ஞான ரத்தன வேல் சிவாச்சாரியர் நடாத்தி வைத்தார்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அந்திசாயும் நேரத்தில் மாலை 6.30 மணிக்கு மகிஷாசுர சங்காரம் இடம்பெற்றது.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.