
யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள்மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவே கேஸ் சிலிண்டர் திருடியதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியில் சேந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமச்சந்திர தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,