கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 256 பேர் கொவிட் தொற்றறக்கு இலக்காகி இருப்பதாகவும் இதில் தற்போது 537 பேர் சிகிச்சை பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் அத்துடன் மாவட்டத்தில் இதுவரை எழுபத்தி மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது அத்துடன் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் முதலாவது தடுப்பூசியினை 61 ஆயிரத்து 894 பேர் பெற்றுள்ளனர் அதேபோல முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 ஆயிரத்து 507 பேர் பெற்றுக் கொண்டுள்ளநீர்
அத்துடன் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இருபது தொடக்கம் முப்பது இதற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதுவரை 107 பேர் மட்டும தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.