முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கைகாக துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளும், பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுமாக 6 ஆயிரத்து 60 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வவுனிக்குளம் காலபோக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமநல காப்புறுதி சபையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் உத்தியோகத்தர், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட வனத்துறை உத்தியோகத்தர், விவசாயிகள் எனப் பலரும்
கலந்துகொண்டனர்.