
நேற்றுமுன்தினம் இசுறுபாய முன்பாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை முன்றலிலும் இன்றைய தினம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.