
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த மூன்று டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தர்மபுரம் பொலிஸாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூவரும் பொலிஸ் விசாரணைகளின் பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்,