சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்
வவுனியா  நெளுக்குளம் பிரதேசத்தில் வசிக்கின்ற வவுனியா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவனுக்கு மருத்துவ தேவைக்காக ரூபா  100,000  நிதியும்
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தின் 83 மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கத்திற்க்காக  மாதாந்த நிதிக் கொடுப்பனவாக. வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பேருந்து கட்டணத்துக்கான கார்த்திகை, ஐப்பசி மாதங்களுக்கான நிதியாக  ரூபா 91,220 வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு –  நெடுங்கேணி தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக  1ம் கட்ட நிதியாக ரூபா  100,000 நிதியும்,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, வேணாவில் பிரதேசத்தில் வசிக்கின்ற குடும்பம் ஒன்றிற்கு மருத்துவ தேவைக்காக 20,000 ரூபா நிதியும், 4,500 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்களும் வழங்கி வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி –  மலையாளபுரம், செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட  குடும்பம் ஒன்றிற்க்கு  விவசாய தேவைக்காக 45,000 ரூபா பெறுமதியில்  மருந்து தெளிக்கும் கருவி,  100அடி நீர் இறைக்கும் குழாய் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் அங்கு வசிக்கும் செஞ்சோலை  பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் ஒரு  குடும்பத்திற்கு  மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக 75,000 ரூபா நிதியும்  வழங்கிவைக்கப்பட்டன. இதேவேளை கடந்த 27/10/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பண்பாட்டு பேரவையின்  ஞானச்சுடர் 310ஆவது மலர் வெளியீட்டு விழாவில் ,
மதிப்பீட்டுரையினை – இளைப்பாறிய  அதிபர்,  ஆ.சிவநாதன் ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன.அத்துடன் ஆனைக்கோட்டை இந்து சமய விருத்தி சங்கத்தால் நடாத்தப்பட்ட  சைவத்திருவிழா விழாவில், வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்காக 40,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ( மருதங்கேணி) கோரிக்கைக்கு அமைவாக,
சிறுவர், சிரேஸ்ட பிரஜைகள், மாற்றுவலுவுடையோர் தின நிகழ்வுக்காக ரூபா 40,000 பெறுமதியான ஆடைகளும் வழக்கிவைக்கப்பட்டது.
செம்பியன்பற்று வடக்கு பிரதேசத்தை சேர்ந்த யா/ உடுத்துறை மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன்,
வல்வெட்டித்துறை – ஊறணி குடியேற்றத்திட்டத்தை சேர்ந்த மாற்றுவலுவுடைய குடும்பத்தை சேர்ந்த மாணவி,

மன்னார் –  சிவபுரம், திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு துவிச்சக்கரவண்டிகள் 142000 பெறுமதியில்  வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களை தெரிவு செய்து குடும்ப அங்கத்தவர்களுக்கேற்ப அத்தியவசியமான உணவுப் பொருளான அரிசி ( 10கிலோ,12கிலோ,15கிலோ) 300,000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டது.

இவ்வுதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் வழங்கிவைத்தனர் இதில் ஆச்சிரம  தொண்டர்களும் பங்குகொண்டனர்..

Recommended For You

About the Author: Editor Elukainews