
கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனது குழந்தையை தாக்கிவிட்டு, தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு, தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டபோது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
அதனையடுத்து, தீக்காயங்களுக்குள்ளான குறித்த நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, தீ வைத்துக்கொண்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதானவர் என்றும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகிறது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.