இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை மிரட்டி கப்பமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனக்க ரத்நாயக்கவிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தன்னைப் படுகொலைசெய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரைக் காப்பற்ற வேண்டுமெனில் 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாக தரவேண்டும் எனத் தெரிவித்து தனக்கு இனந்தெரியாத நபரொருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தததாக ஜனக்க ரத்நாயக்க கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்