
தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும் 2.10.2023 காலை மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.




மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் தலைவி சா.பிதாசினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகவும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ம.ராசலட்சுமி, முன்பள்ளிகளின் வலய இணைப்பாளர் செ.ஆனந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் மாணவர்களுடைய கலைநிகழ்வுகள் இடம் பெற்றதோடு முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் ஆசிரியர்களும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டதோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.