இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடத்தொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர் அதில் கருத்து தெரிவித்த முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்ராசா மேலும் தெரிவித்ததாவது.
இன்றைய தினம் இந்த ஊடக சந்திப்பினுடைய பிரதன நோக்கம் இன்றைய தினம் யாழ் மாவட்டத்திற்கதகு விஷயம் மேற்கொண்டிருக்கின்ற இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் அம்மணி அவர்களுக்கு வடக்கு கடற்றொழில் சமூகத்தின்
ஒரு வேண்டுகோள் ஒன்றினை நாம் இந்த ஊடக வாயிலாக முன் வைத்திருக்கின்றோம்.
மூன்று நாள் விஜயமாக மேற்கொண்டு இலங்கையிலே கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்று குறுகிய நிகழ்வு நிரலிலே இங்கு வருகை தந்திருக்கின்ற எங்களுடைய இந்தியாவினுடைய நிதி அமைச்சர் அவர்களுக்கு
வடக்கு கடற்றொழிலாளர்கள் தயவான ஒரு வேண்டுகோளாக அதாவது இலங்கையிலே வடக்கு கடற்றொழிலாளர்கள் இன்றைக்கு இருக்கின்ற இலங்கையினுடைய கடற்றொழில் திணைக்களத்தினால்
எங்களுடைய வளங்களும், வாழ்வாதாரங்களும், சீன நாட்டுக்கு விற்கப்பட்டு சீன எங்களுடைய இருப்பையே கேள்விக்குறியாக்குகின்ற நிலையிலே இலங்கையின் கடற்றிழில் திணைக்களமும், சீன நாடும் சேர்ந்து,
வடக்கு கடற்றொழிலாளர்களை கடலை விட்டு அன்னியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் எங்களுடைய நாட்டிலே எங்களுடைய கடலிலே குறிப்பாக வடகிழக்கு கடலிலே நாங்கள் சுதந்திரமாக கடைற்றொழிலில் ஈடுபட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு போக முடியாத.
நிலைக்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக இம்மாதம் ஆறாம் திகதி சீன நாட்டு தூதுவர் கூட யாழ் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்கின்றார்.
எங்களுடைய பகுதியிலே எங்களுடைய மக்களுக்கு கிடைக்கின்ற புரத மீனை, அல்லது கடல் உணவை பிடித்து கடற்றொழிலாளர் ஆகிய எங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இங்கே சீன நாட்டு கடலட்டை பண்ணைகளை உற்பத்தியாக்கி
அதை சீன நாட்டில் இருப்பவர்களுக்கு உணவாக கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.
நாங்கள் அன்றைநாடு என்ற வகையிலே இந்திய அரசாங்கத்திடமும், பாரத பிரதமரிடமும் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றோம்.
வடக்கு கடற்பிரதேசத்திலே சீனாவின் ஆதிக்கம் இருக்கின்றது.சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி எங்களுடைய கடலில் நாங்கள் இறமையுடன் வாழ்ந்து தொழில் செய்வதற்கு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றோம்.
அந்த கோரிக்கையை இன்றும் எங்களுடைய இந்தியாவினுடைய நிதி அமைச்சர் அம்மணி அவர்களுக்கு தயவான வேண்டுகோளாக நாங்கள் விடுகின்றோம்.
நீங்கள் எங்களுக்கு அண்டைய நாடு. ஏங்களுக்கு தொப்புள் கொடி உறவாக தமிழ்நாடு இருக்கின்றது.
அந்த வகையிலே சீன நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்க்கு வழிவகை செய்யவேண்டும்.
அதேபோன்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் இடையிலே அல்லது தமிழ்நாட்டிற்க்கும் வட கிழக்குக்கும் இடையிலே இருக்கக்கூடிய தொப்புள் கொடி உறவுக்கு தடையாக இருக்கின்ற
தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட இந்திய இழுவை படங்களினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்பில் இருந்து எங்கள் வடக்கு கடற்றொழிலாளர்களை, எங்களுடைய வாழ்வாதாரம், அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
அந்த நடவடிக்கை என்பது 2016 ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் திகதி டில்லியிலே மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய வெளி விவகார அமைச்சு மட்டத்திலே எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே
இரண்டு நாடுகளும் அந்த இழுவைமடி தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே முன்கொண்டு செல்லப்பட்டு இந்த இழுவைமடி இந்திய படகுகளினால் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் அழிக்கப்படுவதை நிறுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று பல உதவிகளுக்காக இந்தியாவிடம் கோரிக்கை விட்டிருந்தோம். கடற்றொழிலாளர்களுக்கு அந்த கோரிக்கைகள் இதுவரையும் சாதகமாக பரிசீலிக்கப்படவில்லையா என்கின்ற கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.
இந்த 2500 தமிழ்நாட்டு இழுவை மடி படகுகளின் ஆதிக்கம் வடக்கு கடலில் அதிகரிப்பதனால் தான் கடற்றொழில் திணைக்களம் சீன நாட்டை கொண்டு வந்து இறக்கிறது.
அதாவது தமிழ்நாட்டு கடற்றொலாளர்களுக்கும், வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது என்று அரசாங்கமும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மீனவர்களை அந்த பக்கம் திசையை திருப்பி விட்டு மறுபுறத்திலே சீனாவைக் கொண்டு வந்து எங்களுடைய முற்றத்திலே நிறுத்துகின்ற செயற்பாட்டை மேற்கொள்கிறார்கள்.
இந்த சீன நாடு எங்களுடைய பகுதிக்கு நுழைவதற்கும், அந்த 2500 இந்தியன் இழுபப் படகுகள் எங்களுடைய கடற்பகுதிக்கு வருவது தான் காரணமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.
எனவெ தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவை மடி தொழிலாளர்களே உங்களுடைய இந்த 2 500 இழுவை மடி படகுகளையும் நீங்கள் நிறுத்தி வடக்கு கிழக்கு கடத்தொழிலாளர்களை இலங்கை சீன ஆதிக்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நீங்கள் அந்த தொழிலை நிறுத்தி மாற்று தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்று
தொப்புள் கொடி உறவு என்ற ரீதியிலே நாங்கள் தமிழ்நாட்டு இழுவை மடி மீனவர்களை தயவாக வேண்டி நிற்கின்றோம்.
அந்த ஒரு செய்தியும், இரண்டாவது அண்மையிலேயே கடந்த 26 ஆம் தேதி 10ஆம் மாசம் யாழ் மாவட்டத்திலே கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள், வடமகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இணைந்து சட்ட திருத்தம் தொடர்பான விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த விளக்கம் தொடர்பாக சில ஊடகங்களிலே நான் செய்தியை பார்த்தேன்.
அந்த கருத்து தெளிவூட்டலை நாங்கள் குழப்பவதாக பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.
எங்களுடைய தெளிவான நிலைப்பாடு 1979 ஆம் ஆண்டாக இருந்தாலும் சரி 2018 ஆம் ஆண்டாக இருந்தாலும் சரி 2024 ஆம் ஆண்டாக இருந்தாலும் சரி எங்களுடைய வடக்கு கடலிலே வெளிநாட்டு மீனவர்களுக்கு அனுமதி பெற்றோ அல்லது அனுமதி பெறாமலோ தொழில் செய்வதை வடக்கு கடற்றொழில் சமூகம் விரும்பவில்லை.
இதுதான் செய்தி 79 இல் இருக்கிறது.1980 இருக்கிறது என்பதற்கு நாங்கள் வரவில்லை
இந்த சட்ட திருத்தத்திலே
வெளிநாட்டு படகுகள் வடக்கு கடற்பரப்பில் தொழிலில் இடுவதை நாங்கள் விரும்பவில்லை.
முன்னுக்கு இருக்கிறது பின்னுக்கு இருக்கிறது என்பது அல்ல.
இதே நேரம் இந்த சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் ஊடாகத்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கருத்தையும் துறைக்கு பொறுப்பா அமைச்சர் சொல்கிறார்.
நாங்கள் அந்த அமைச்சரிடம் கேட்கின்றோம்.
கடந்த மாதம் இலங்கையினுடைய ஜனநாயக சோசலிச குடியரசின் உடைய பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுக்கப்பட்டது.
வாக்கெடுப்பிலே சுகாதார அமைச்சராக அவர் தொடர்வார் என்று தானே பாராளுமன்றத்தில் வந்தவர்கள் வாதிட்டு வக்களித்து வெற்றிபெற்றார்.
ஆனால் தற்போது இலங்கையினுடைய ஜனாதிபதி அந்த அமைச்சினுடைய செயல்பாடுகளில் தவறு இருப்பதால் கருதியதனால்தான் அவர் சுகாதார அமைச்சர் மாறியமைத்திருக்கின்றார்.
பாராளுமன்றத்திலே கொண்டுவந்து மக்கள் பிரதிநிதிகள் என்று இயற்றப்பட்ட சட்டம், சட்டங்களும் நடவடிக்கைகளும் சரியா? பிழையா? அப்படியாயின் ஏன் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை பதவியை நீக்கி மாற்று பதவியை வழங்கினார். ஏன் ? அன்று கொண்டுவரப்பட்ட சட்டம் பாராளுமன்றத்தில் ஒன்று.
இந்த பாராளுமன்றத்தினுடைய நடவடிக்கைகள் என்பது மக்களுடை நலன் சார்ந்த நடவடிக்கைகளாக நாங்கள் கருதவில்லை.
சீன நாடு என்ன சொல்கிறதோ அதைச் செய்வதற்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
கடற்றொழில் திணைக்களத்தால் உருவாக்கப்பட்டது. சீன நாட்டினுடைய விருப்பங்களுக்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இது கடத்தொழிலாளர்களுக்காக அல்ல.
கடற் தொழிலாளர்கள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் எனவே இலங்கையினுடை பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு கடற்றிழில் சமூகம் ஆகிய வடகிழக்கு மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
இந்த சட்டம் விளக்கங்களுக்குரிய காலமும் அதனை ஆய்வு செய்வதற்குரிய காலமும் கடற்றொழில் சமுகதிற்க்கு போதியது அல்ல.
இன்றிலிருந்து இன்னும் ஒரு மாதமாவது கால அவகாசம் தந்து இந்த சட்ட திருத்தம் தொடர்பான மாற்று கருத்துக்களையும், ஏனைய கடற்றொழில் சமூகங்களுக்கு தெளிவூட்டி நாங்கள் வெளிப்படுத்துவதற்கு உரிய கால அவகாசம் வேண்டும்.
ஏன் குறிப்பிட்ட அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின் றவர் கடற்றொழில் அமைச்சராக இருந்து கொண்டு இந்தச் சட்டத்தை சரியா தவறா என்பதற்கு அப்பால் மக்களுக்கு தெளிவூட்ட தவறுகின்றார்.
ஒரே ஒரு நாள் 19ம் மாதம் 25 ம் திகதி தனியார் விடுதியிலே அந்த தெளிவூட்டலை வைத்துவிட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சர் ஏன் துடிக்கின்றார்.
சட்டத்தில் பிழை இல்லையா,சட்டம் சரியாக இருந்தால் மக்களுக்கு அதனை தெளிவூட்டுங்கள்.
மக்களுக்கு தெளிவூட்டினால் தானே மக்களும் ஆரோக்கியமாக அதனை பின்பற்றுவார்கள்.
மக்களுக்கு விளங்காத சட்டங்களையும், மக்களுக்கு ஒன்றையும் பாராளுமன்றத்தில் ஒன்றையும் கூறிக்கொண்டு இந்த சட்டங்களை நிறைவேற்றி சீனாவை வடக்கிலே ஆதிக்கம் செலுத்தி தங்களுடைய கஜானா கலை நிரப்புவதற்குரிய வழியாகத்தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.
கடந்த வாரம் கூட யாழ் மாவட்டத்தில் அல்லது வடக்கு மாகாணத்திலிருந்து கடற்றொழிலாளர்கள் என்கின்ற போர்வையிலே ஒரு குழு சென்று இந்த கடல் அட்டைக்கு சம்பந்தப்பட்ட நாட்டினுடைய தூதரக அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து வந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு என்ன வேலை இந்த நாட்டோடு. திட்டமிட்டு இவ்வாறான ஆட்களை அனுப்புகிறார்கள்.
இங்கிருந்து அந்த நாட்டினுடைய தூதரக அதிகாரிகளை கொழும்பிலே தனியார் விடுதிகளில் சந்தித்து அவர்கள் என்ன நோக்கத்திற்காக சந்தித்தார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது.
ஆகவே கடற்றொழிலாளர்களை திட்டமிட்ட வகையிலே சீனாவின் பக்கம் இழுத்துமக்களை குழப்பி குளிர் காய்ந்து எங்களுடைய கடலையும் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் வளத்தையும் அளிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
அதேபோன்று இந்தியாவினுடைய நிதியமைச்சர் இங்கு வந்து இன்று செல்கின்றார்.
இந்த கடற்றொலாளர்களுடைய நீணடகால பிரச்சனைக்கு 2016 ஆண்டு நவம்பர் மாதம் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
நாங்கள் வன்முறைய விரும்பவும் இல்லை, நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள், இராஜதந்திர ரீதியிலே பேச்சுவார்த்தை மூலம் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் ஏன்ற கருத்திலே நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
தமிழகம் எங்களுக்கு தொப்புள் கொடி உறவு. அதேபோன்று நாங்கள் தமிழகத்தோடு இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம்.
ஆனால் தமிழ்நாட்டினுடைய 2500 இழுவைமடி படகுகளும் தான் தடையாக இருக்கின்றது.
அந்த இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்தும் வரைக்கும் நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்க்கு அந்தப் படகுகளை கட்டுப்படுத்துங்கள்,
மீனவர்களை நல்லெண்ண அடிப்படையிலே விடுதலை செய்யுங்கள் கோரிக்கைை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்போம் என்கின்ற மலசெய்தியையும் கூறுகின்றோம் என்றார்.