
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் கண்பார்வை குறைபாடுடைய பொலிசாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கண் பரிசோதிக்கப்பட்டு 400ற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது,

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
