இலங்கையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் ஏற்படும் இறப்புக்களை தடுப்பூசி மருந்தேற்றலின் மூலமே தடுக்க முடியும் என்றும் இளம் பராயத்தினருக்கு கொரோனாவின் அறிகுறியும் அதனால் ஏற்படும்
பாதிப்புகளும் உடனே தெரியாதவை. இதனால் உங்களால் உங்களது வீடுகளிலும் சுற்றுப்புறத்திலுமுள்ள
முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தொற்று ஏற்படுவது மிகவும் அதிகம் என்றும் உலகளாவியரீதியில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களிற்க்கு நோயின் தாக்கமும் இறப்பு வீதமும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 20 தொடக்கம் 29 வயது பிரிவினர்க்கு தடுப்பூசி
மருந்தேற்றப்படுகிறது என்றும் மருதங்கேணி மக்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியது போல் இந்த 20-29 வயதினரும் தடுப்பூசி ஏற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார். தமது பிரதேசத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட தவற விட்டவர்களும் தடுப்பூசி
பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,
இலங்கையில் அம்பாந்தோட்டை தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் 20-29 வயதினருக்கு சீனோபாம் தடுப்பூசியே ஏற்றப்படுகிறது, என்றும் இதனால் கிடைக்கின்ற சீனொபாம் தடுப்பூசியை தவறாது ஏற்றிக் கொள்ளுமாறும் தெரிவித்ததுடன்
இன்று அம்பன் பிரதேச மருத்துவ மனையில் ஆரம்பிக்கப்பட்ட 20 தொடக்கம் 29 வயதிற்குட் பட்டவர்களுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் பணி நாளை (22/09/)
j/419,j/420,j/422 கிராம சேவகர் பிரிவுகளுக்கு குடத்தனை வடக்கு AMTS பாடசாலையிலும், நாளை மறுதினம் (23/09) கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் J/433, J/434,J435. கிராம சேவகர் பிரிவுகளுக்கும் , 24/09/ அன்று வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் J/ 432. கிராம சேவகர் பிரிவிற்க்கும் , 27/09 அன்று மாமுனை பாடசாலையில் j/425,J/426 கிராம சேவகர் பிரிவுகளுக்கும், 28/09 அன்று மணல்காடு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் J/418 J/419 கிராம சேவகர் பிரிவுகளுக்கும், 29/09 அன்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் J/428,J/429 கிராம சேவகர் பிரிவுகளுக்கும், 30/09/ அன்று செம்பியன் பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் J/426,J/427 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கும், 01/10 அன்று உடுத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் J/ 430,J/431 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கும், 02/10 அன்று மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தவற விட்டவர்களுக்காகவும்,04/10/ அன்று மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் நிறுவன பணியாளர்களுக்கும் கரவலை வாடிகளில் தங்கியிருந்து பணியாற்றுவோருக்கும் கொரோணா தடுப்பு ஊசி ஏற்றப்படும் என்றும், இதுவரை தடுப்பூசி ஏற்றிக் கொள்ளதவர்கள், இரண்டாம் தடுப்பு ஊசி ஏற்ற வேண்டியவர்கள் எந்தவொரு நிலையத்திலும் தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளலாம் என் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்
வடமராட்சி