
திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.








“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர். இதன்போது அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.