எரிசக்தி துறையில் ஈரானிய முதலீடுகளுக்கு பிரதமர் அழைப்பு

ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.தூதுவர் அலிரேசா டெல்கோஷ், பழங்காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நெருக்கமான சமூக கலாசார உறவுகளை குறிப்பிட்டு, தனது இராஜதந்திர பதவிக் காலத்தில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார்.எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஈரானுக்கு தற்போது வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.தற்போதைய பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவுவதுடன் அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காக ஈரானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவின் பிரதானி கே சொஹைல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews