
பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.