
முல்லைத்தீவு, முறிகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் சிறுத்தை ஒன்று அகப்பட்ட நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் உயிரோடு மீட்கப்பட்டது.
கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்கிய அவசர தகவலின் பிரகாரம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிறுத்தை மீட்கப்பட்டு அடர்ந்த வனப் பகுதியான வில்பத்து சரணாலயப் பகுதிக்குப் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது
ஆறு அடி நீளமான பெண் சிறுத்தையே இவ்வாறு வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுவிக்கப்பட்டது என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
…………