வடமராட்சி வடக்கு பிரதேச செயலககம் மற்றும் வடமராட்சி வடக்கு கலாசார பேரவை இணைந்த வடமராட்சி வடக்கு கலாசார பெருவிழா வல்வெட்டித்துறை வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலமையில் 10.11.2023 காலை 9:30 மணியளவில் ஆர்மபமானது.
இதில் முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு, கௌரவ, விருந்தினர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் இன்னியம், கரகாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், உடுக்கிசை, பாடல்கள் பவனியாக வரவழைக்கப்பட்டு வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள், மங்கல விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் வரவேற்பு உரையினை வடமராட்சி வடக்கு உதவி பிரதேச செயலர் தயாந்தன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிலம்பாசான் நடராசா சோதிசிவம் அவர்களின் அரங்கில் அரங்க செயற்பாட்டு உரையினை வல்வை ஆனந்தராசா நிகழ்த்தியதை தொடர்ந்து தலமையில் உரையினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சண்முகராசா சிவசிறி நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து பிரதேச கலைஞர்களின் இசைக்கச்சேரி, நடனங்கள், இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து பிரதேச கலைஞர்களுக்கான கலைப்பரிதி,
ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை பிரதம விருந்தினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் சிவபாதசுந்தரம், மூத்த கலைஞரும் சிறப்பு விருந்தினருமாகிய கலைவாதிரி இருதயராஜஸ், சமூக செயற்பாட்டாளரும் , ஆதிகோவிலடி ஆதிசக்தி அம்மன் ஆலய தலைவருமான நா.வர்ணகுலசிங்கம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதில் வடமராட்சி வடக்கு பிரதேச கலைஞர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.