எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
இதையடுத்து குறித்த 22 மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் இரண்டாவது தடவையாக இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஏனைய 21 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தவிட்டார்.