
கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் முதல்வரின் மணிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது.



கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து, மணிவிழா நாயகியான பாடசாலை மதல்வருக்கு மலர் மாலை அணிவித்து பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து வாழ்த்துரைகளும், கௌரவிப்புகளுடம் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளும் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.




குறித்த மணிவிழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், குறித்த பாடசாலையின் முன்னைநாள் அதிபருமான சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் றூபதவி கேதீஸ்வரன், முன்னைநாள் கல்வி அமை்சரும் வடமாகாண கல்வி அமைச்சருமான குருகுலராஜா, அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.