கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (17.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தின் போது மிதி பலகையில் பயணித்த நடத்துனர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் ஆகியன உடைந்துள்ளதுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர் மற்றும் வீட்டின் வாயில் முற்றாக சேதமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.