குறித்த அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பாடசாலை முதல்வர், பாடசாலை சமூகம் புதிய அதிபரை அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக கடமைகளை அதிபர் பொறுப்பேற்றார். தொடர்ந்து, தனது பொறுப்புக்களை சம்பிரதாய பூர்வமாக புதிய அதிபர் இளவேந்தி நிர்மலராஜிடம் ஓய்வு பெற்ற முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் கையளித்தார்.
தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், பாடசாலை ஒன்றுகூடல் மைதானத்தில் கூடிய மாணவர்கள் கரங்களை தட்டி வரவேற்றதுடன், வரவேற்பு உரைகளும் இடம்பெற்றது.
நிகழ்வில், வடமாகாண அபிவிருத்தி இணைப்பாளர் ருசாங்கன், அயல் பாடசாலை ஆபிரிக்கள், பாடசாலை ஆபிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2500க்கு மேற்பட்ட மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலயம் வடமாகாணத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட பாடசாலையாக திகழ்கின்றது.
அப்பாடசாலை, தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட சாதனைகள் பலவற்றை கொண்டதுடன், பல்துறை சார்ந்த புத்திஜீவிகளை உருவாக்கியது.
யுத்தத்தின் பின்னர் பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு முகம் கொடுத்து முன்னேறி செல்லும் குறித்த பாடசாலை தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களுடன் இரு பாலாரையும் உள்ளடக்கிய கலவன் பாடசாலையாக உயர்ந்து நிற்கிறது.
புதிதாக கடமைகளை பொறுப்பேற்கும் பாடசாலை முதல்வர் அப்பாடசாலையை மேலும் வளர்ச்சி பாதைக்குள் அழைத்து செல்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக பாடசாலை சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.