
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தின் 311 வது ஞானச்சுடர் மலர் வெளியிடு வாரந்த நிகழ்வில் இன்று காலை 24/11/2023 வெளியீட்டு வைக்கப்பட்டது.




இறைவணக்கத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. தொடர்ந்து மதிப்பீட்டு உரையுரையுடன் கூடிய வெளியீட்டு உரையினை சமாதான நீதவானும் அதிபருமான செ.பரமேஸ்வரன்
நிகழ்த்தினார்.






தொடர்ந்து ஞானச்சுடர் 311 வது சிடரினை செ.பரமேஸ்வன் வெளியீடு செய்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்
அச்சுவேலி சரஸ்வதி வித்தாயலத்திற்க்கு சிறுவர்களுக்கான புத்தக கொடுப்பனவாக 15000 ரூபாவும் கல்யவியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 60000 ரூபா நிதி இணை பாடவிதான செயற்பாட்டிற்க்காக வழஙகப்பட்டது
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நலன்விரும்பிகள், கல்வியாளர்கள் சந்நிதியான் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.