
தொழிலிற்க்காக தென்பகுதிக்கு சென்றவர் இதுவரை தொடர்பில் இல்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த 2023/10/28 அன்று ஹம்பகா மாவட்டத்தில் தங்கி நின்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கை சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ம் திகதி கம்பகாவிற்க்கு சென்று தான் அங்கு சென்று சேர்ந்துள்ளேன் என்றும் அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த 30/10/2023 வரை தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தொலைபேசியில் தெரித்த அவரது மனைவி அதனது கணவரை கண்டுபிடித்து தர ஆவன செய்துதவுமாறு கேட்டுள்ளார்
Oic Maruthankerny +94 77 363 3578
Missing vathirajan wife 077 046 5770