
இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழி இன்றி நாளுக்கு நாள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மர்ம படகு மூலம் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்
இதையடுத்து மரைன் போலீசார் விரைந்து சென்று ஏழு பேரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.