
இங்கிரிய நகரில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
பேருந்தை நிறுத்தி வைத்திருந்த வேளையில், நேற்று பிற்பகல் உந்துருளியில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் குறித்த நடத்துநர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிட்டம்புவ – திஹாரியா பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்து பெருமளவான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இரவு திஹாரியா நகரில் மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.