
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கரவெட்டி கிளையின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்திற்க்கு உட்பட்ட 27. மேற்றுத்திறனாளிகளுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


நேற்று காலை 10:00 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கரவெட்டி பிரிவைச்சேர்ந்த ரகுபரன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர் k.பாலகிருஷ்ணன், கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன் ஆகியோர் கலந்துகொண்டு இவ் உதவிகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்கிவைத்தனர்.


இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கரவெட்டி பிரதேச நிர்வாகிகள், கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவை திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.



இதேவேளை இதற்க்கான நிதியாக தலா ஒவ்வொருவருக்கும் 6200 ரூபா வீதம் பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் கனகம்மா அறக்கட்டளை வழக்கியிருந்தது.