
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறை பிரதேச நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பருத்தித் துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.




இதில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் சங்கரப்பிள்ளை திரவியராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.






குறித்த அதிகாரிகளுக்கான முதலுதவி பயிற்சிகளை முதலுதவி போதனா ஆசிரியர் நா. இலங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர் சதானந்தன், செயலாளர் மோகனதாஸ், யாழ்ப்பாணம் கிளையைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்.



