
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் A35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக 50 வருடங்கள் கடந்த பாரிய மரம் ஒன்று கடையின் மீது வேருடன் சாய்ந்துள்ளது.


இதன் காரணமாக கடையின் சுவர்குதி மற்றும் கூரையும் பாதிக்கப்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்றைய தினம் 01.12.2023 கிளிநொச்சி அரசமரக் கூட்டுத்தாபனத்தினர் அப்பகுதியில் இருந்த மரத்தை அகற்றி உள்ளனர்.

