
தெல்லி்ப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று(2) மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் நிறைவுற்றது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் , விசேட பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் இணை வள்ளி தெய்வானையும் ; விநாயகப்பெருமானும் இணைந்து திருவீதியுலா வந்தனர்.
சம காலத்தில் கந்தபுராண படன படிப்பானது பல ஆலயங்களில் மருவி வரும் நிலையி்ல் ஆண்டு தோறும் இவ் ஆலயத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.