யாழ்.காங்கேசன்துறை- வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்துவந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் தனிமையில் வாழும் முதியவர் பல நாட்களாக வெளியில் நடமாட்டம் இல்லாத நிலையில்
முதியவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அயலவர்கள் அவதானித்தனர். இதனையடுத்து வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே பார்த்தபோது முதியவர் இறந்து கிடப்பது தொிந்தது.
முதியவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகம் எழும் நிலையில் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.