யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நெற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
கடற்றொழிலுக்காக நேற்றைய தினம் கடலுக்கு சென்ற கட்டைக்காடு மீனவன் ஒருவரின் வலைகள் நீரோட்டத்துடன் தாளையடி பகுதியில் ஆள்கடலில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின் கடலிலுள்ள பாதுகாப்பு தடுப்பு கம்பம் மற்றும் மிதப்புகளில் சிக்குண்டு பல இடம்சம் பெறுமதியான வலைகள் அறிந்தும் கிழிந்தும் நாசமாகியுள்ளன.
குறித்த கடல் நீரை நன்னீராக்கும் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பலரது படகுகள், பலரது வலைகள் என்பன் இவ்வாறு நாசமாகியுள்ளன.
இதேவேளை குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சில வருடங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு மீனவர் சமூகமும் ஒட்டுமொத்தமாக திரண்டு ஏதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிட தக்கது.
நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட மீனவர் அடுத்த வேளை பிளைப்பிற்க்காக ஏங்கும் ஒரு வறிய மீனவர் ஆவார்