தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

27,000 தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது இந்த வேலை நிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நாளை நள்ளிரவு வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews