எமது கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறங்கி கைதாகும் இந்தியமீனவர்களுக்கு எதிராகநீதிமன்றங்களில் வாதாட வேண்டி வரும் என
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமுன்னாள் தலைவர்அ,அன்னராசா தெரிவித்தார்
இன்று டான் தொலைக்காட்சி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
முக்கியமான விடயம் ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க விரும்புகின்றோம்
அதாவது வடக்கு தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளிலே நேற்றைய தினம் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட காரைக்கால் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த படகுகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமையானது மிகவும் ஆபத்தான தொழில்முறையில் காரைக்கால் மீனவர்கள் தொழிலஐ மேற்கொள்கின்றார்கள்
இவர்கள் எங்களுடைய கடலிலே ஒரு வாரமாக நின்று சட்ட விரோத இழுவைமடி தொழிலில் ஈடுபடுகின்றார்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து எங்களுடைய கடல் வளத்தை அழிக்கின்ற செயற்பாட்டை காரைக்கால் நாகல் பட்டின கடற் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றார்கள்
அந்த தொழிலில்ஈடுபடுபவர்களை இலங்கை கடற் படையானது சவாலுக்கு மத்தியில் கைது செய்துள்ளது தவிர்க்க முடியாத சம்பவங்களை எதிர் நோக்கித்தான் கடற்படை இந்திய படகுகளை கைது செய்துள்ளது
குறிப்பாக தமிழ்நாடு காரைக்கால் நாகப்பட்டின கடற் தொழிலாளர்களுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால்
எமது பகுதியில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற அதாவது இழுவைமடி தொழிலை நிறுத்த வேண்டும் நிறுத்த தவறும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாடு ஆக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட தொழிலாளர்களினால் எங்களுடைய வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதால் நாங்கள்இனியும் பொறுத்திருக்க மாட்டோம் எங்களுக்காக தமிழ்நாடு மக்கள் குரல் கொடுத்திருக்கின்றார்கள் தீக்குளித்து எரிந்து இருக்கின்றார்கள் அந்த வகையிலே அந்த மக்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிப்பதோடு இந்த காரைக்கால் நாகப்பட்டினம் மீனவர்கள் எல்லை தாண்டி எங்களுடைய பகுதியிலே கடற்தொழிலில் ஈடுபடுகின்றார்கள்
இதை கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்காலத்தில் கடற்தொழில் சமூகமம் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக கடற்தொழிலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளை வைத்து நீதிமன்றங்களிலே வழக்காட தயாராக இருக்கின்றோம்.
இதற்கு மேலாக பொறுமையை நாங்கள் இழந்துவிட்டோம் தமிழ்நாட்டு மீனவர்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்கிறார்கள் இல்லை
எங்களுடைய தொப்புள்கொடி உறவு தமிழ்நாடு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தால் காரைக்கால் நாகப்பட்டின மீனவர்கள் எங்களுடைய கோரிக்கைகளையும் எங்களுடைய கருத்தை செவிமடுக்காது செயற்படுகின்றார்கள் இதனை தொடர்ந்தும்நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் அனுமதிக்க மாட்டோம்
எதிர்காலத்தில் வட க்கு கடற்தொழிலாளர் சமூகமும் சட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக நீதிமன்றத்திலே எதிர் தரப்பாக களமிறங்குவதற்கு அதாவது சட்டத்தரணி ஊடாக களம் இறங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம்
எமது எமது கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறங்கி கைதாகும் இந்தியமீனவர்களுக்கு எதிராகநீதிமன்றங்களில் வாதாட வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.