
கிளிநொச்சியில் வசித்துவரும் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கியிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
கொமசர்ல் வங்கியில் கணக்கு வைத்திருந்த நபர் ஒருவர் அதில் ஒருதொகை பணத்தினை பேணிவந்துள்ளார்.
இந்த நிலையில் நீண்டகாலமாக தனது வங்கிகணக்கினை பராமரிப்பு செய்யாத நிலையில் வங்கியில் போட்ட பணம் அவ்வறே இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்துள்ளார்.
இதேவேளை வங்கியால் கொடுத்த ஏ.ரி.எம்.காட்டைக்கூட அவர் பயன்படுத்தாத நிலையில் வீட்டில் வைத்துவந்துள்ள நிலையில் கடந்த 16.08.2023 அன்று வங்கி கணக்கினை பார்த்தபோது அதில் தனது வைப்பில் இருந்த 80 ஆயிரம் ரூபா பணம் ஒண்லையின் மூலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வங்கி காட்டினை பயன்படுத்தி பொருள் கொள்வனு செய்துள்ளதாக வங்கியால் வாடிக்கையாளருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைய வாடிக்கையாளர் ஒருவருக்கு வங்கியால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் இதனை ஏனைய மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார்