கொழும்பில் இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டமானது 73 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்துக்கு 73 நாட்கள் ஆகின்ற நிலையில், அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவை முடிவெடுக்கப்பட்டு 23 நாட்கள் கடந்துள்ளன.
குறிப்பாக அமைச்சரவை உபகுழு முன்வைத்த யோசனைகளுக்கு அனுமதி வழங்கி 23 நாட்கள் கடந்துள்ளன.
எனினும் அதிபர்-ஆசிரியர் ; சங்கங்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கத்தின் பக்கம் அசமந்தப் போக்கே காணப்படுகின்றது.
கடந்த 16ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளருடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. எனினும் அந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் சார்பில் உறுதிமொழி வழங்குவதில் அசமந்தப்போக்கே காணப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்கு பாதீட்டினூடாக தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார் என்றே தொடர்ச்சியாகக் கூறப்பட்டது.
அதேபோன்று நிதி அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் உறுதிமொழி வழங்கப்பட்டது.
எனினும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காது காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்.