கல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கருத்துத் தெரிவித்தார்.
இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களுக்கு படிக்கும் பாடசாலையில் பொருத்தமான பாடம் இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற பாடசாலைகளிலட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“உதாரணத்திற்கு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 182 மாணவர்கள் இம்முறை 9 A சித்திகளையும், விசாக வித்தியாலயத்தில் 206 மாணவர்கள் 9 A சித்திகளையும் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையில் வேறு பாடசாலையில் இருந்து விண்ணப்பிக்கும் போது அந்தத் தகைமையைப் பெற்றுள்ள, ஆனால் அந்தப் வலயத்திலோ அல்லது கற்ற பாடசாலையில் பாடப் பிரிவு இல்லாத பிள்ளைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டார்.