
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறுமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், மின்சார சபையின் உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் அழைத்து காரணங்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.