
யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார் தலமையில் இடம் பெற்றது.





முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை வளாகம் வரை பாண்ட் இசை முழங்க அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆம்பமாகின.






இதில் விருந்தினர்களாக 521 வது படைப்பிரிவு தளபதி கேணல் ரூவான் பெர்ணாந்து, எல்லங்குளம் படை முகாம் கட்டளை அதிகாரி மேஜர் பனங்கம,
கொழும்பு துறைமுக கப்பல் கட்டுமானத்தள பிரதம பொறியியலாளர் M.A.குணசிங்க, கொழும்பு கப்பல் கட்டுமானத்தள இணைப்பு அதிகாரி H.A.மெண்டிஸ், ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்துடன் சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், இராணுவத்தினர் என பலரும் கலநது கொண்டனர்.