
ஹைலெவல் வீதியில் ஹோமாகம பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியைக் கடந்த பாதசாரிகள் இருவர் மீது லொறி மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 34 வயதான பகமூன பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
காயமடைந்த மற்றைய நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.